Breaking News
Home / செய்திகள் (page 371)

செய்திகள்

மதுரை உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள உலகனேரி குட்டம் ஊரணியில் தூர்வாரும் பணி

மதுரை உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள உலகனேரி, குட்டம் ஊரணியில் மதுரை சிவில் இன்ஜினியர்கள் அசோசியேஷன் சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இப்பணியினை மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் அலெக்ஸாண்டர், பொன்மணி மற்றும் சிவில் இன்ஜினியர்ஸ் நிர்வாகிகள் அறிவழகன், வெங்கட்ராமன், மணிகண்டன் , ரமேஷ் குமார்,சரவணன், குமரேஷ், வெற்றி உட்பட பலர் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் …

Read More »

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் பணி நிறைவு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் சி.எஸ்.ஐ தொடக்கப் பள்ளியில் பணி நிறைவு விழா நடைபெற்றது. 25 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்தவர் ஆசிரியை லதா பணி நிறைவு பெற்றார். அவருக்கு அப்பள்ளியில் பெற்றோர்,முன்னாள் மாணவர்கள்,பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் சார்பாக பணி நிறைவு விழா ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ராபின்சன் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தில்வேல் குமரன் மணிவண்ணன் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் …

Read More »

மதுரை அழகர் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள மலைப்பகுதிகள் அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை அழகர் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள மலைப்பகுதிகள் அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு மதுரையை அடுத்த அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு சொந்தமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அறநிலையத்துறைக்கு அழகர் கோயில் சொந்தமானது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மதுரையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் சித்திரை …

Read More »

மறுக்கப்படும் ஹெச் – 1பி விசா: இந்தியர்களை குறி வைக்கிறதா அமெரிக்கா?

மறுக்கப்படும் ஹெச் – 1பி விசா: இந்தியர்களை குறி வைக்கிறதா அமெரிக்கா? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கை கட்டுப்பாடுகளால், ஹெச் – 1பி விசாக்கள் மறுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு என அமெரிக்க ஆலோசனை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் …

Read More »

தமிழகத்தை தாக்குமா ? Bulbul புயல்

தமிழகத்தை தாக்குமா ? Bulbul புயல் Bulbul Cyclone – இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை இருக்காது என்ற போதும்…‘Bulbul’ புயல்… – தமிழகத்தைத் தாக்குமா..? Cyclone Bulbul – தமிழகம் மற்றும் புதுவையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும். வங்கக் கடலில் நாளை ‘புல் புல்’ புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை …

Read More »

அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விருது.

அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது. அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த ஆண்டின் ஆசியாவின் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்(International Rising Star of the year – Asia Award) என்ற விருது வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அமெரிக்க பயணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் …

Read More »

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கான SSC CGL தேர்வு!

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கான SSC CGL தேர்வு! விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு!! Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தி வருகிறது. தற்போது டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு லெவல் தேர்வு நடத்துகிறது. இதற்கான அறிவிக்கை கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, உதவி கணக்கு அலுவலர், …

Read More »

பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்

பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்.. பரபரப்பு. தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டி உள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். திருவள்ளுவர் உருவப்படத்திற்கு விபூதி பூசி, காவி நிற உடை உடுத்தி ஒரு புகைப்படத்தை பாஜக சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் …

Read More »

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் முதன் முறையாக மிகக் குறைவான கீறல்களுடன் இதயவால்வு மாற்று சிகிச்சை

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, முதன் முறையாக மிகக் குறைவான கீறல்களுடன் செய்யப்படும் இதயவால்வு மாற்று சிகிச்சையை (டிஏவிஆர்) வெற்றிகரமாக செய்திருக்கிறது. இச்சிகிச்சை செயல்முறையானது 60 அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதயவால்வை மாற்றுவதற்கு திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை தேவைப்படாது: ஒரு இரத்தநாளத்தில் ஒரேயொரு கீறல் போதுமானது. சிகிச்சை முடிந்த 48 மணி நேரங்களுக்குள் நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பலாம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் …

Read More »

187 இடங்களில் சிபிஐ சோதனை

ரூ.7200 கோடி வங்கி மோசடி… 187 இடங்களில் சிபிஐ சோதனை வங்கிகளில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்ற மோசடி தொடர்பாக, 187 இடங்களில் சிபிஐ போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கி மோசடிகள் தொடர்பாக 42 வழக்குகளை பதிவு செய்துள்ள சி.பி.ஐ. 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழகம் உள்ளிட்ட …

Read More »