Breaking News
Home / செய்திகள் (page 374)

செய்திகள்

மதுரையில் டால்மியா சிமெண்ட் & சூரியா ஏஜென்சி இணைந்து நடத்திய கலந்துரையாடல்

மதுரை ஆரப்பாளையத்தில் டால்மியா சிமெண்ட் மற்றும் ஆரப்பாளையம் சூரியா சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்டிடம் உறுதியாக கட்டுவதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் டால்மியா சிமெண்ட் கம்பெனியின் மண்டல அதிகாரிகள் கிரிஸ்டோபர், பிலால் மற்றும் சூரியா சிமெண்ட் ஏஜென்சி உரிமையாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கலாம் டிவி செய்திக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

மதுரையில் அப்பளம்,வடகம், மோர், வத்தல் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா

மதுரையில் அப்பளம்,வடகம், மோர், வத்தல் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா நடைபெற்றது. மதுரையில் அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் ஏழாவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் திருமுருகன தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் விஜிஸ் வரவேற்றார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா, தமிழ்நாடு தொழில் வர்த்தக …

Read More »

ஈரோட்டில் இயற்கை மற்றும் பனை பாதுகாப்பு மாநாடு

ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெற்ற இயற்கை மற்றும் பனை பாதுகாப்பு மாநாட்டில் மதுரை கோவில்பாப்பாகுடி கண்மாயில் பனை விதை விதைத்த நிகழ்விற்கு மதுரை புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மதுரை கிரீன் சிட்டி அரிமாசங்கம்,மதுரை காமராசர் பல்கலைக்கழக சமூக அறிவியல் புலம் ஆகியோருக்கு அசிஸ்டு உலக சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த பனை விதை விதைக்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த “துரை விஜயபாண்டியன்” மற்றும் “சி.பி.ரவி” ஆகியோருக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டது. கலாம் …

Read More »

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தீபாவளி விருந்து

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திறன் மேம்பாடு மற்றும் தீபாவளி விருந்து வழங்கப்பட்டது. மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தொடர்வோம் அன்பு இல்லத்தில், வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அங்கு உள்ள குழந்தைகளுக்கு தீபாவளி விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் நன்கொடையாக கிடைத்த நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவை உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கரங்களால் …

Read More »

மதுரை போடிநாயக்கன்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு கத்தோலிக்க நலவாழ்வு சங்கம் மற்றும் டான் அறக்கட்டளை ராக்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு மாநில தலைவி மேரிஸ்டெல்லா தலைமை தாங்கினார். வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பாப்புரெட்டி, முனியசாமி, சார்லஸ் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை இயக்குநர் அந்துவான் ரெக்லின் வரவேற்றார். முகாமை மாணிக்கம் எம்.எல்.ஏ., …

Read More »

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு ஏற்படும் அவல நிலை

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு ஏற்படும் அவல நிலை. விரைவில் மாறுமா ❓ சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செய்தி சேகரிக்கப்பதற்காக சென்ற க்ரைம் எக்ஸ்பிரஸ் சேலம் செய்தியாளர் பாண்டித்துரை, பாலமுருகன். மற்றும் சேலம் கலாம் நியூஸ் டிவி செய்தியாளர் குமரவேல் சென்றனர். இவர்கள் செய்தி சேகரித்து கொண்டிருந்த போது …

Read More »

மதுரை சோழவந்தானில் புது விவசாய செயல்முறை விளக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தில் விவசாய கல்லூரி மாணவிகள் இப்பகுதியிலுள்ள விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று அவர்களுடைய புது விவசாய பணிகள் குறித்து கலந்துரையாடல் மற்றும் செயல் முறை நடத்தினர். இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 25 வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் நேற்று முன்தினம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள நிலத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் …

Read More »

மதுரை சோழவந்தான் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

மதுரை சோழவந்தான் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் இப்பகுதி கிராமங்களுக்கு வேண்டும் வரத்தை தரக்கூடிய சக்தி வாய்ந்த அம்மனாக அருள் பாவித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். முதல் நாள் பூசாரி வீட்டில் இருந்து அம்மன் பெட்டியை மேளதாளத்துடன் வாணவேடிக்கையுடன் பக்தர்கள் கோவிலுக்கு அழைத்து வந்தனர். நேர்த்தி …

Read More »

ராணிப்பேட்டை காவல்நிலைய போலீசார் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராணிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் நிலவேம்பு கசாயம் வழங்கினர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின் பெயரில் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீஸார் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் ராணிப்பேட்டை நகர காவல்துறை ஆய்வாளர் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார், சிறப்பு புலனாய்வு ஆய்வாளர் பாபு, …

Read More »

மதுரை கீழ்நெடுங்குளம் கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்வதை, தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சத்யகோபால் ஆய்வு

மதுரை மாவட்டம், வடக்கு வட்டம், கீழ்நெடுங்குளம் கண்மாயில் இருந்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்வதை, தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சத்யகோபால் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் மற்றும் உதவி ஆட்சியாளர் (பயிற்சி) ஜோதி சர்மா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர். கலாம் …

Read More »