Breaking News
Home / 2020 / June / 17

Daily Archives: June 17, 2020

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூரில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கை கழுவுதல் பற்றிய விளக்கமும், அதற்கான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட ரெட் கிராஸ் வழங்கிய ஊட்டச்சத்து பாக்கெட்டுகள், இந்திய ஹோமியோபதி மருத்துவ குழுமம் சார்பாக திருவாரூர் ஹோமியோபதி மருத்துவர் வெ.ஈஸ்வரமூர்த்தி வழங்கிய ஆர்செனிகம் ஆல்பம் 30 மருந்துகள் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கை கழுவுதல் பற்றிய விளக்கமும், அதற்கான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜே.ஆர்.சி …

Read More »

ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்சை மணியாச்சியில் சுட்டுக்கொன்று தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாவீரன் வாஞ்சிநாதனின்_109வது_நினைவு_தினம் இன்று

நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்சை மணியாச்சியில் சுட்டுக்கொன்று தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாவீரன் வாஞ்சிநாதனின்_109வது_நினைவு_தினம் இன்று. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே …

Read More »

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி – குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில் சென்று ஆறுதல் கூறினார். லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனியின் குடும்பத்தினரை, மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் படி, 20 லட்ச ரூபாய், அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறி, …

Read More »

கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் லடாக் எல்லையில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் லடாக் எல்லையில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய சீனா எல்லைப்பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலில் 23 இந்திய ஜவான்கள் வீர மரணமடைந்தனர். இவர்களுக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மெழுகுவரத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஜோபின் சிறில் தலைமை …

Read More »

கோவில்களை திறந்து வழிபாடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும்! திருநெல்வேலியில், மண்சோறு உண்ணும் நிகழ்ச்சி மூலம், இந்து தேசிய கட்சி கோரிக்கை!

கோவில்களை திறந்து வழிபாடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும்! திருநெல்வேலியில், மண்சோறு உண்ணும் நிகழ்ச்சி மூலம், இந்து தேசிய கட்சி கோரிக்கை! திருநெல்வேலி, ஜூன்.17:- கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசிய ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டிருக்கும் திருக்கோவில்கள் அனைத்தையும் உடனடியாக திறந்து வழக்கமான வழிபாடுகள் நடத்திட அனுமதிக்க வேண்டும்! என்பதை வலியுறுத்தி இந்து தேசிய கட்சி சார்பில், அதன் நிறுவனர் தலைவர் டரிபிள் …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் அணுமின் நிலைய தொழிலாளி பலி!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் விபத்தில், ஒருவர் உயிரிழப்பு! உயிரிழந்தவரின் தலையில், கண்டெய்னர் லாரி, ஏறி- இறங்கிய பரிதாபம்! திருநெல்வேலி,ஜூன்.17:- கன்னியாகுமரி மாவட்டம், “மைலாடி” கிராமத்தைச் சேர்ந்த, சுப்பிரமணியன் என்பவரின் மகன் சரவணன் (வயது 35 ).இவர் கூடங்குளம் அணுமின் நிலைய,கட்டுமானப் பிரிவில், ஒப்பந்த அடிப்படையில், பணி புரிந்து வருகிறார். இன்று( ஜூன்.17) காலையில், வழக்கம் போல்,மைலாடியில் இருந்து, அணுமின் நிலையத்திற்கு, அவருடைய மோட்டார் பைக்கில், வேலைக்கு வந்து கொண்டிருந்தார். அவ்வாறு, …

Read More »

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் சீன அதிபரை கண்டித்து நூதன போராட்டம்

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் சீன அதிபரை கண்டித்து நூதன போராட்டம்! அதிபரின் உருவ பொம்மையை தூக்கில் தொங்கவிட்டனர்! திருநெல்வேலி, ஜூன். 17: – இந்திய எல்லைப்பகுதியான லடாக் என்னும் இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சுட்டுக் கொன்ற சீன ராணுவத்தை கண்டித்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் கே.சங்கர பாண்டியன் தலைமை யில், இன்று (ஜூன்.17) கண்டனப் போராட்டம் நடத்தினர். வண்ணார் …

Read More »