Breaking News
Home / 2020 / June / 26

Daily Archives: June 26, 2020

மதுரையில் மூன்று மகன்கள் இருந்தும் கவனிக்காததால் உணவிற்கே வழியின்றி விரக்தியில் தாய் தந்தை தற்கொலை

3 மகன்கள் இருந்தும் உணவுக்கு வழியின்றி பெற்றோர் தற்கொலை..! மதுரையில் 3 மகன்கள் இருந்தும் வயதான தம்பதியினர் உணவிற்கே வழியின்றி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மச்சக்காளை – பசுபதி. இவர்கள் தனியாக வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இவர்களது மூன்று மகன்களும் திருமணம் ஆகி தனித்தனியே மதுரை, கோவை, சவுதி அரேபியா என வசித்து வருகின்றனர். மதுரையில் வசித்து …

Read More »

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இ.காங்கிரஸ் கட்சி சார்பாக சீன எல்லையில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மௌனஅஞ்சலி

இராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர, வட்டார இ.காங்கிரஸ் கட்சி சார்பாக சீன எல்லையில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்துவி மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாரதலைவர் ஐ.கே.குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத்துணைத்தலைவர் எஸ்.எஸ்.குருசாமி, மகிளாகாங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன், ராஜுவ்காந்தி பஞ்சாயத்துசங்கதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அசோக், தெற்குவட்டாரதலைவர் பழனிவேல், மாவட்ட பொதுசெயலாளர்கள் வழக்கறிஞர் செல்வக்குமார்,ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …

Read More »

பெரியகுளத்தில் நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இணையவழி போராட்டம்

பெரியகுளத்தில் நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இணையவழி போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் ராஜா முகமது அவர்கள் தலைமையில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். நிர்வாகிகள் உறுப்பினர்கள் கண்டன கோஷங்களுடன் பதாகை …

Read More »

திருநெல்வேலியில் “குறைந்த விலையில் வீடு”என்னும் போர்வையில், “தரமற்ற” வீடுகளை கட்டிக்கொடுக்கும், போலி நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி” கோரிக்கை

திருநெல்வேலி, மேலப்பாளையத்தில், “குறைந்த விலையில் வீடு”என்னும் போர்வையில், “தரமற்ற” வீடுகளை கட்டிக்கொடுக்கும், போலி நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சித்தலைவருக்கு, “தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி” கோரிக்கை! திருநெல்வேலி, ஜூன். 26:- திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, நான்கு மண்டலங்களில் ஒன்றான, “மேலப்பாளையம்” மாநகரில், தற்பொழுது விரிவாக்கப்பகுதிகள், பெருகிக் கொண்டே வருகின்றன. இதன் காரணமாக, “தனியார்” கட்டிட ஒப்பந்தக்காரர்கள் சிலர், “குறைந்த விலையில் வீடு” என்னும் போர்வையில், மட்டரகமான …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் வகுரணி சுற்றுவட்டார பகுதிகளில் முதியோர்களுக்கு கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் வகுரணி பஞ்சாயத்துக்குட்பட்ட கனவாய்பட்டி.சந்தைப்பட்டி. கிராமங்களில் வசிக்கும் முதியோர் உதவித்தொகை பெறும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் கபசுர குடிநீர் சூரணத்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வகுரணி பஞ்சாயத்தில் உதவித்தொகை பெறும் 300க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு கபசுர குடிநீர் பவுடர் வாங்கி சென்றனர். கலாம் நியூஸ் டிவி செய்திக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

Read More »

.20 ஆயிரம் மதிப்பிலான, கீழே கிடந்த, அதிநவீன செல்போனை, உரியவரிடம் ஒப்படைத்த, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தலைவர்

ரூ.20 ஆயிரம் மதிப்பிலான, கீழே கிடந்த, அதிநவீன செல்போனை, உரியவரிடம் ஒப்படைத்த, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தலைவர்! திருநெல்வேலி, ஜூன். 26:- திருநெல்வேலி மாவட்ட, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் தலைவர் மேலச்செவல் நெய்னா முகம்மது, அலுவலக வேலையாக, பாளையங்கோட்டை, சமாதான புரத்தில் உள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, நேற்று (ஜூன்.25) காலையில் வந்து இருந்தார். பணிகளை முடித்து விட்டு, அலுவலகத்தை விட்டு, நண்பகல் 12 மணிக்கு, வெளியே …

Read More »

திருநெல்வேலியில், “கொரோனா வைரஸ்’ தொற்று காரணமாக உயிரிழந்த, இந்துமதத்தை சார்ந்த, பெண்மணியின் உடலை, மனிதாபிமானத்துடன் எரியூட்டிய, இஸ்லாமிய அமைப்பினர்!

திருநெல்வேலியில், “கொரோனா வைரஸ்’ தொற்று காரணமாக உயிரிழந்த, இந்துமதத்தை சார்ந்த, பெண்மணியின் உடலை, மனிதாபிமானத்துடன் எரியூட்டிய, இஸ்லாமிய அமைப்பினர்! திருநெல்வேலி, ஜூன். 26:- “மனிதாபிமானமிக்க செயல்களை செய்வோருக்கு, ஜாதி, மதம், இனம் என எதுவுமே தடையாக இருக்காது!” என்பதை, இன்று (ஜூன். 26) திருநெல்வேலியில் நிகழ்ந்த, உணர்வு பூர்வமான, “சம்பவம்” ஒன்று, நிருபித்துள்ளது. “கொரோனா வைரஸ்” தொற்று காரணமாக, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள, “தனியார்” மருத்துவமனை ஒன்றில், உயிரிழந்த 60 …

Read More »

திருநெல்வேலி, “ஆயுதப்படை” மைதானத்தில், காவல்துறையின், புதிய உணவு விடுதியை ஓம் பிரகாஷ் மீனா எஸ்.பி திறந்து வைத்தார்!

திருநெல்வேலி, “ஆயுதப்படை” மைதானத்தில், காவல்துறையின், புதிய உணவு விடுதி! “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” ஓம் பிரகாஷ் மீனா திறந்து வைத்தார்! திருநெல்வேலி, ஜூன். 26: திருநெல்வேலி மாவட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், “புதிய காவலர் நல உணவு விடுதி” ஒன்றினை, இன்று(ஜூன். 26) காலையில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” ஓம்பிரகாஷ் மீனா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், “ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்” …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி ஊராட்சியில் ஹோமியோபதி மருத்துவ முகாம்

வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி ஊராட்சியில் ஹோமியோபதி மருத்துவ முகாம் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி ஊராட்சியில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை வேட்டவலம் சூப்பர் கம்ப்யூட்டர், டி.ஆர்.எஸ் தமிழ் சவுண்டு சர்வீஸ் மற்றும் ஓலைப்பாடி இளைஞர்கள் இனைந்து நடத்திய கொரோனா நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க …

Read More »

பழனியில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம்

பழனியில் சாத்தான்குளம் சித்திரவதை மரணங்களை கண்டித்தும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு மற்றும் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம‌ராஜா அறிவித்ததின் பெயரில் இன்று தமிழக முழுவதும் காலை முதல் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக பழனி நகரில் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart