Breaking News
Home / 2020 / August / 09

Daily Archives: August 9, 2020

மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா.

முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தனியார் மருத்துவமனையில் அனுமதி. மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுகூடத்தில் பங்குபெற்றார் என்பதும் முதலமைச்சரை வரவேற்றார் என்ற …

Read More »

திருநெல்வேலியில், காசு வைத்து சூதாடிய 29 பேர் கொண்ட, கும்பல் கைது

திருநெல்வேலியில், காசு வைத்து சூதாடிய 29 பேர் கொண்ட, கும்பல் கைது! 4 லட்சத்து, 58 ஆயிரம், ரொக்கப்பணம் பறிமுதல்! திருநெல்வேலி மாநகர காவல் சரகத்துக்கு உட்பட்ட, பாளையங்கோட்டை ரகுமத் நகரில் உள்ள, ஒரு “தனியார்” திருமண மண்டபத்தில், இன்று (ஆக.9) “முழு ஊரடங்கு” காரணமாக, சிலர் கும்பலாக, “காசு” வைத்து சூதாடுவதாக, மாநகர காவல்துறைக்கு, “ரகசிய” தகவல் வந்ததைத் தொடர்ந்து, அந்த மண்டபத்தில், திருநெல்வேலி “சட்டம், ஒழுங்கு” பிரிவு, …

Read More »

சென்னை இராயபுரத்தில் மக்கள் சேவை இயக்கம் சார்பில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை இராயபுரம் 5வது மண்டலம் மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் மக்கள் சேவை இயக்கம் இணைந்து 51வது வட்டத்தில் உள்ள கல்லறை சாலையில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது . இதில் அப்பகுதி பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை, ரத்த பிராணவாயு பரிசோதனை செய்யப்பட்டது இம்முகாமில் மக்கள் சேவை இயக்கத்தில் நிறுவன தலைவர் ஜெ .யுவராஜ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார் இதில் மக்கள் சேவை இயக்கத்தின் துணை …

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விமரிசையாக நடந்த மீன்பிடி திருவிழா

முதுகுளத்தூர் அருகே சமூக இடைவெளியை பின்பற்றி மீன்பிடி திருவிழா விமர்சையாக கொண்டாட்டம் – ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் சிறப்பான முறையில் மீன்பிடித் திருவிழா கிராம மக்கள் முன்னிலையில் சமூக இடைவெளி பயன்படுத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நல்லூர் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஊரணியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பல்வேறு வகையான மீன்குஞ்சுகளை தமிழக அரசின் மானிய …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி கிராமத்தில் 60 வயதில் ஆதரவற்ற நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி சோமு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி கிராமத்தில் 60 வயதில் அனாதையாக வசிக்கும் மாற்றுத்திறனாளி சோமு, குப்பைகளில் சாலைகளில் கிடக்கும் மதுபாட்டில்கள் எடுத்து கடையில் போட்டு வரும் ரூபாய் 10, 20 ஐ வைத்து வாழ்ந்து வரும் அவலம் தனிநபர் என்பதால் ரேசன் (குடும்ப அட்டை) கூட இல்லாத அவலம், இதனால் அரசு வழங்கும் எந்த சலுகையும் பெறமுடியாத நிலை மேலும் ரேசன் கடையிலும் அரிசி பொருள்கள் பெறமுடியாத நிலையில் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேற்கு ஒன்றியம் மாதிரிமங்கலம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேற்கு ஒன்றியம் மாதிரிமங்கலம் ஊராட்சியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குத்தாலம் திமுக முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவரும் முன்னாள் செயலாளருமான குஞ்சு அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக மாதிரிமங்கலம் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அய்யன் வள்ளுவர் கழக மூத்த முன்னோடி இரா. கண்ணையன்ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் …

Read More »

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா நோய் தொற்றிலிருந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்றி வேண்டி மதுரை 57 வது வட்ட அதிமுக நிர்வாகிகள் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை

கொரோனா நோய் தொற்றிலிருந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்றி வரும் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் திருமதி ஜெயந்தி ராஜூ அவர்கள் பரிபூரண நலத்துடன் மக்கள் பணியாற்ற வேண்டிக்கொண்டு தெற்கு 3ம் பகுதி துணை செயலாளர் ஜோசப் தனுஸ்லாஸ் ஏற்பாட்டில் 57வட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் காதர்கணேசன்,எம்ஜிஆர் நாகராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் மடப்புரம் காளியம்மன் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்து ஊராட்சியில் காட்டுநாயக்கர் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்து ஊராட்சியில் காட்டுநாயக்கர் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜீத்பாண்டி தலைமையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள காட்டு நாயக்கர் குடும்பத்தினர் 100 பேருக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் வழங்கினார். சமூக இடைவெளியை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மெய்யினம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் 100 …

Read More »