Breaking News

Daily Archives: September 5, 2020

திருநெல்வேலியில், வ.உ.சி பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வீர வணக்கம்

திருநெல்வேலியில், 149-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், வீர வணக்கம்!திருநெல்வேலி, செப்.5:- இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக, ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதுடன், அவர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டியும், தன்னுடைய தேசப்பற்றை மிளிரச்செய்த, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின், 149-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி பொருட்காட்சித் திடலில் அமைந்துள்ள, வ.உ.சி.மணி மண்டபத்தில் நிறுவப்பட்டிருக்கும், வ.உ.சி.யின் முழவுருவச்சிலைக்கு, மாவட்டத்தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், மலர் மாலைகள் …

Read More »

வ.உ.சி யின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி யின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக அதன் மாநில பொதுச் செயலாளர் பி.வி கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவபாண்டி, தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

கஞ்சா வியாபாரிகள் சொத்துகளை முடக்க சட்டத்தில் இடமுண்டு : ராமநாதபுரம் எஸ்பி.கார்த்திக்

கஞ்சா வியாபாரிகள் சொத்துகளை முடக்க சட்டத்தில் இடமுண்டு என ராமநாதபுரம் எஸ்பி.,கார்த்திக் கூறினார்.சென்னை பூக்கடை காவல் துணை ஆணையளராக இருந்த கார்த்திக்,ராமநாதபுரம் எஸ்பி.,யாக பொறுப்பேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:குளச்சலில் உதவி எஸ்பியாகவும்,மதுரை நகர்,சென்னை பூக்கடை துணை ஆணையராக பணியாற்றி விட்டு ராமநாதபுரம் எஸ்பி.,யாக பொறுப்பேற்றுள்ளேன். மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு காக்கப்படும்.பணி நேரத்தில் என்னை பொதுமக்கள் சந்தித்து புகார் மனு அளிக்கலாம்.கஞ்சா விற்பனையை தடுக்க கஞ்சா வியாபாரிகளின் சொத்துகளை பறிமுதல் …

Read More »

திருப்பூரில் வ.ஊ. சிதம்பரனார் 149 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் இரத்த தான முகாம்.

திருப்பூரில் வ.ஊ. சிதம்பரனார் 149 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் இரத்த தான முகாம். திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் வ.ஊ. சிதம்பரனாரின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் அவிநாசி சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முருகபாண்டி தலைமையில் …

Read More »