Breaking News

Daily Archives: September 8, 2020

திருநெல்வேலியில், “இந்திய விடுதலை போராட்ட வீரர்” மாவீரன் சுந்தரலிங்கனாரின் “நினைவேந்தல் நிகழ்ச்சி

திருநெல்வேலியில், “இந்திய விடுதலை போராட்ட வீரர்” மாவீரன் சுந்தரலிங்கனாரின், 221- ஆவது ஆண்டு “நினைவேந்தல்” நிகழ்ச்சி! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நடைபெற்றது! இந்திய சுதந்திரத்துக்காக, வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதியாக இருந்து, ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி, தற்கொலையைப் படையை உருவாக்கி நாட்டுக்காக, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில், தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்த, மாவீரன் சுந்தரலிங்கனாரின், 221- ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி, இன்று (செப்டம்பர்.9) திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மகாராஜா நகரில், …

Read More »

திருநெல்வேலி தச்சநல்லூரில், 2 லாரிகளில் கடத்தப்பட்ட, ரூ.38 லட்சம் மதிப்புள்ள,8 டன் குட்கா பறிமுதல்

திருநெல்வேலி தச்சநல்லூரில், 2 லாரிகளில் கடத்தப்பட்ட, ரூ.38 லட்சம் மதிப்புள்ள,8 டன் குட்கா பறிமுதல்! ஓட்டுநர்கள் இருவரும் கைது! திருநெல்வேலி, செப்.9:- திருநெல்வேலி மாவட்டத்தில், போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுத்திடும் பொருட்டு,மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ரோந்துப்பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குட்கா, பான் மசாலா போன்றவை, போலீசாரால் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டும் …

Read More »

திருநெல்வேலியில், இந்து மக்கள் கட்சியினர், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலியில், இந்து மக்கள் கட்சியினர், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்! ராமநாதபுரம் அருண் பிரகாஷ் கொலை வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி! திருநெல்வேலி, செப்.9:- ராமநாதபுரத்தைச் சேர்ந்த, இந்து முன்னணி பிரமுகர் அருண்பிரகாஷ் என்பவர், அண்மையில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலையில், குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காததைக் கண்டித்தும், விரைவில் கண்டுபிடித்து, கைது செய்ய வலியுறுத்தியும், திருநெல்வேலி சுத்தமல்லி சந்திப்பில், இந்து மக்கள் கட்சியினர் மாவட்டத் தலைவர் எஸ்.உடையார் …

Read More »

மதுரை தீக்கதிர் பேருந்து நிறுத்தம் எதிரே பை.பாஸ் ரோட்டின் நடுவே உள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாததால் சாலையை கடக்கும் பொதுமக்கள் அவதி.உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை தீக்கதிர் (கண்ணன் டிபார்ட்மெண்டல்) ஸ்டோர் பேருந்து நிறுத்தம் எதிரில் பை.பாஸ் ரோட்டின் நடுவே உள்ள மின் விளக்குகள் எரியாததால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.அடிக்கடி அந்த பகுதியில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையை கடப்பதால் விபத்து ஏற்படுவதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை தீக்கதிர் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பை.பாஸ் ரோட்டின் நடுவே உள்ள …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆன்லைன் வகுப்பை முறைப்படுத்த கோரியும், தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக இளைஞரணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் …

Read More »

ஏழ்மை நிலையிலும் பல சமூக சேவைகள் செய்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூரை சேர்ந்த பாரதிமோகன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூரை சேர்ந்தவர் பாரதிமோகன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் பெரம்பூர் பாரதிமோகன், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வருமையிலும் தன்னை முழுமையாக சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டார். நாள்தோறும் மன நலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு முடி திருத்தம் செய்து தூய்மைப்படுத்தி காப்பகத்தில் ஒப்படைப்பது, ஆதரவற்ற முதியோர்களுக்கு நாள்தோறும் தேடிச்சென்று உணவு, போர்வை, உடைகள் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் அத்தியாவசிய …

Read More »