Breaking News
Home / 2020 / November / 29

Daily Archives: November 29, 2020

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஏ.பி.சத்திரம் அருகில் சூரிய மின்சக்தி சோலார் சிஸ்டம் புதிய ஷோரூம் ஸ்ரீ பாலாஜி ஏஜென்சி திறப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஏ.பி.சத்திரம் அருகில் ஸ்ரீ பாலாஜி ஏஜென்சி மெகா சூரிய மின்சக்தி சோலார் சிஸ்டம் புதிய ஷோரூமை மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) ரகுபதி திறந்து வைத்தார் இதில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் ரோட்டரி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருர் தாலுகா செய்தியாளர் ரகு

Read More »

உசிலம்பட்டியில் 4 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ நீதிபதி துவக்கி வைத்தார்.

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ நீதிபதி துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி மற்றும் சேடப்பட்டி ஒன்றிய பகுதிகளில் உசிலை சட்டமன்ற உறுப்பினர் பா நீதிபதி நாலு கோடி செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, பேவர் பிளாக் சாலை, தார்சாலை, நாடகமேடை, ஆகியவற்றை பூமி பூஜைபோட்டு மற்றும் திறந்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சேடப்பட்டி ஊராட்சி …

Read More »

உசிலம்பட்டி அருகே ஏழுமலையில் அரிமா சங்கம் மற்றும் சுரேஷ் டிம்பர்ஸ் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம்

உசிலம்பட்டி அருகே ஏழுமலையில் அரிமா சங்கம் மற்றும் சுரேஷ் டிம்பர்ஸ் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர். மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் ஏழுமலையில் சுரேஷ் டிம்பர் மற்றும் அரிமா சங்கம் எழுமலை ஆரம்ப சுகாதார நிலையம் இனைந்து மாபெரும் ரத்ததான முகாமை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி துவக்கி வைத்தார். இந்த முகாமிற்கு வட்டார வளர்ச்சி மருத்துவ அலுவலர் அரிமா சங்க நிர்வாகிகள் சுரேஷ் டிம்பர்ஸ் உரிமையாளர் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 110 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 110 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பள்ளபட்டியில் எழுமலை சாலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் 110 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது.அந்த மரத்தடியில் இருந்த ஒருபெட்டிகடை மீது விழுந்தது.இரவுநேரம் என்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவிலை தகவலறிந்து தீயணைப்புறையினர் போக்குவரத்து இடையூறாக இருந்த மரங்ளை அப்புறபடுத்தினா்.மீதி உள்ள ஆபத்தான மரங்ளை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் …

Read More »

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோவிலில் போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோவிலில் போராட்டம். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாய போராட்ட வீரர்களுக்கெதிராக மத்திய, மாநில பா.ஜ.க அரசுகளால் கட்டவிழ்த்து விடப்படும் அராஜகம் மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக நாகர்கோவில் மாநகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வடசேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ச கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ். அந்தோணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். முருகேசன், எம். அகமது உசைன், …

Read More »

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் சார்பில் முதியோர்களுக்கு மதிய உணவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் அன்பால் அரவணைப்போம் என்னும் அறக்கட்டளையின் சார்பில் இன்று மதிய முதியோர் ஆதரவற்ற இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு சிறப்பாக வழங்கப்பட்டன மேலும் இந்த அமைப்பின் மூலமாக ஐந்தாயிரம் பண மர விதைகளையும் அவினாசி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இந்த அமைப்பினர் இன்று பனை மரம் கன்றுகள் நட்டு வைத்தனர் மேலும் இரண்டாயிரம் மரக்கன்றுகளும் அவிநாசி பகுதி முழுவதும் இன்று காலையில் இருந்து மாலை வரை …

Read More »

கம்பம் அருகே மகா சக்தி மாசாணியம்மன் கோவிலில் கார்த்திகை பவுர்ணமி சிறப்பு பூஜை

கம்பம் அருகே மகா சக்தி மாசாணியம்மன் கோவிலில் கார்த்திகை பவுர்ணமி சிறப்பு பூஜைகள். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி ரோடு தொட்டமான் துறையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா சக்தி மாசாணியம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா கடந்த மாதம் மார்ச் 2-ஆம் தேதி நடைபெற்றது. இதன்படி நேற்று கார்த்திகை பவுர்ணமி மேலும் மாசாணிஅம்மன் அவதரித்த தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தன இதில் …

Read More »

தேனி மாவட்டம் கம்பத்தில் அமமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் அமமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா.மாற்றுக் கட்சியில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியில் அமமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார் ,ஒன்றிய செயலாளர் மலைச்சாமி முன்னிலை வகித்தார். மேலும் பேரூர் கழகச் செயலாளர்கள் ,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் என பலர் கலந்து …

Read More »

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை வரும் முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரைக்கு வரும் முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஆலோசனை கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்:- மதுரைக்கு டிசம்பர் 4 ம் தேதி வரும் முதல்வருக்கு அதிமுக …

Read More »

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு 5 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு 5 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், இராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையர் விசாகன், டீன் சங்குமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன்,மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி நவீன்பாண்டியன்,மிசா செந்தில்,அனுப்பானடி பாலகுமார்,108 ஆம்புலன்ஸ் சேவை தென்மண்டல மேலாளர் பிரசாத் …

Read More »