பழனியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை நசுக்கும் வகையில் மூன்று வேளாண் மசோதாக்களை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தினால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்படும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகின்றது. இச்சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்க மத்திய அரசு வழிவகை செய்கிறது. உடனடியாக இச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கட்சி கொடிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறை அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்..*