Breaking News
Home / செய்திகள் / கீழக்கரையில் கொரோனா காரணமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள சாலைகளை திறப்பதற்கு அனைத்து ஜமாத்தார்கள் நவாஸ்கனி எம்.பியிடம் கோரிக்கை

கீழக்கரையில் கொரோனா காரணமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள சாலைகளை திறப்பதற்கு அனைத்து ஜமாத்தார்கள் நவாஸ்கனி எம்.பியிடம் கோரிக்கை

கீழக்கரையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாலைகளை திறப்பதற்கு அனைத்து ஜமாத்தார்கள் நவாஸ் கனி எம்பி இடம் கோரிக்கை வைத்தனர்…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் கொரோனா பாதித்த பகுதிகள் மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளையும் சுகாதாரத்துறை, நகராட்சி துறையினர், காவல் துறையினர் தடுப்புகளை வைத்து அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதாக கீழக்கரை வந்த நவாஸ்கனி எம்.பி இடம் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் வர்த்தக சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தனர்.

இதை அடுத்து அப்பகுதிகளை சென்று பார்வையிட்ட எம்.பி அவர்கள் கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகள் உள்ள பகுதிகளை மட்டும் அடைக்க வேண்டும் எனவும், மற்ற பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளை அடைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் பேசி உடனடியாக அப்பகுதிகளில் உள்ள தடுப்புகளை அகற்றுவதாக உறுதியளித்தார்.

மேலும் இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில பொருளாளர் ஷாஜகான், நகர் செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி, துணைச் செயலாளர் அல்நூர் ஹஸன், டவுன் ஹாஜி காதர் பாக்ஸ் உசேன், நைனா முகம்மது, வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மக்கள் டீம் காதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

கலாம் நியூஸ் டிவி ஏர்வாடி செய்தியாளர் சையது அபுதாஹீர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart