Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில்,உலக சுற்றுச்சூழல் தின விழா!

திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில்,உலக சுற்றுச்சூழல் தின விழா!

திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில்,உலக சுற்றுச்சூழல் தின விழா!
காவல் உதவி ஆணையர் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜூன்.5:- சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிற உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன்.5) திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றத வ முதன்மைக் கல்வி அலுவலர் ச.செந்திவேல்முருகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மாநகர காவல், மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவின், உதவி ஆணையர் எஸ். சேகர் பங்கேற்று, அந்த அலுவலக வளாகத்தில், பயன்தரு மரக்கன்றுகளை, நட்டார். முதன்மைக் கல்வி அலுவலரின், நேர்முக உதவியாளர்கள் டைட்டஸ், ராமசுப்பு, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின், சமக்ரா சிக்சா பிரிவு ஒருங்கிணைப்பாளர் செல்வ நாயகம் உட்பட, திரளானோர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் தொடர்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தாழையூத்து, சங்கர் மேல்நிலைப்பள்ளியின், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கோ. கணபதிசுப்ரமணியன், பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாக்கியநாதன் ஆகியோர், சிறப்பு அழைப்பாளரிடமிருந்து, மரக்கன்றுகளை, பெற்றுக் கொண்டனர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், நன்றி கூறினார்.

“கலாம் நியூஸ்” செய்திகளுக்காக, “ஒளிப்பதிவாளர்” எஸ். மணிகண்டனுடன், “மாவட்டச் செய்தியாளர்” அசன்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart