Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது

திருநெல்வேலி மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன!

திருநெல்வேலி, ஜூன்.5:- ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல்படி ஆண்டு தோறும் ஜூன் மாதம் 5- ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பல்லுயிர் பெருக்கம் என்பது இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும். அண்மையில் பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்க நாடு சந்தித்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இப்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் கோவிட்-19 ஆகியவற்றாலும், மக்கட்தொகைப் பெருக்கம், வனங்களின் சுருக்கம் ஆகியவற்றாலும், பல உயிர்கள் அழிந்து கொண்டே வருவதுடன், புவி வெப்பமாதலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

எனவே,இவற்றைக் கட்டுப்படுத்திட ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளின் மங்கல நிகழ்வுகளில், மரக்கன்றுகள் நடுவதை கட்டாயம் ஆக்கிக் கொள்ள வேண்டும்! என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 5) உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, எஸ்டிபிஐ கட்சி சார்பில், திருநெல்வேலி மாவட்டத்தில்,பல்வேறு ஊர்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. களக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி ஏகேஒய் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் எம்.முகம்மது மதார் தலைமையில், மொத்தம் 10 இடங்களில்,பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா, களக்காடு நகர கிளையின் ஆட்சிக்குழு உறுப்பினர் பி.அபுபக்கர், சமூக ஆர்வலர்கள் ஜே.இஸ்மாயில், எஸ்.நஜீப் உசேன் மற்றும் ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். இது போல, மேலப்பாளையத்தில் நேத்தாஜி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி துவக்கி வைத்தார். பாளை தொகுதி செயலாளர் புகாரி சேட், துணைத்தலைவர் சலீம் தீன்,பசுமை மேலப்பாளையம் செயலாளர் பக்கீர் முகம்மது லெப்பை, அலிய்யா அரபிக் கல்லூரி ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவை தவிர மாவட்டத்தில் மொத்தம் 42 இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart