Breaking News
Home / செய்திகள் / வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்தி சென்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்தி சென்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்தி சென்ற 3 டன் ரேஷன் அரிசி சோதனைச்சாவடியில் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் ஓட்டுநர் கைது அம்பலூர் போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியான தும்பேரி ஊராட்சி அண்ணாநகர் சோதனை சாவடி பகுதியில் காவல்துறையினர் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற மினி லாரி சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்ற உடன் சோதனை சாவடி காவலர்கள் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து மலைப்பகுதியில் சென்று மினி லாரியை மடக்கி பிடித்த போது அதிலிருந்து ஓட்டுனர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினார்

பின்னர் இரு காவலர்கள் அவரை விரட்டி சென்று கைது செய்து விசாரணை செய்தபோது தும்பேரி பகுதியை சேர்ந்த சஞ்சீவி என்பது தெரியவந்துள்ளது பின்னர் மினி லாரியை சோதனை செய்த போலீசார் அதில் இருந்து 3 டன் ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி பறிமுதல் செய்துஅம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart