Breaking News
Home / செய்திகள் / தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு

தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு

தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் நேற்று அறிவித்தார்.

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்ட ஆட்சியாளர் பள்ளவி பல்தேவ் துரித நடவடிக்கையில் மேற்கொண்டு தற்போது தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பொதுமக்கள் அத்தியாவசிய தேவை போல் வாங்குவதற்கு தேனிப் பகுதியில் படையெடுத்து வருகின்றனர்.

தேனி சுற்றி உள்ள கிராம பகுதியிலிருந்து பொது மக்கள் அன்றாட தேவைகளை வாங்குவதற்கு வாகனம் மூலமாக தேனி பகுதிக்கு படையெடுத்து வந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கு

தேனி ,சின்னமனூர், கம்பம் ,போடி, கூடலூர் ஆகிய 5 நகராட்சிகளுக்கு
மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 20ஆம் தேதி தொற்று அதிகம் காணப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மறு உத்தரவு வரும்வரை ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளர் அறிவித்து நடைமுறையில் உள்ளது.

இன்று 4 நகராட்சிகளும் சிறப்பு கூட்டம் போடப்பட்டு 4 நகராட்சியில் உள்ள அம்மா உணவகம், சத்துணவு சமையல் கூடங்கள் சரக்குப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை முதல் அத்தியாவசிய தேவையான பலசரக்கு கடை மருந்து கடை, பெட்ரோல் பங்க் நடமாடும் காய்கறி வாகனங்கள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருள் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வர வேண்டும் என்று அணியாமல் வருவதற்கு 200 ரூபா அவதாரம் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக தேனி செய்தியாளர் சதிஸன் உடன் ஒளிப்பதிவாளர் அஜ்மல்கான்

About Kanagaraj

Check Also

மதுரை பங்கஜம் காலனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை எளியோர்களுக்கு சேலை வழங்கப்பட்டது

மதுரை பங்கஜம் காலனியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளையொட்டி முன்னாள் மேயர் முத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *