அம்மா இரு சக்கர வாங்கிய மகளிருக்கு, ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று கவுந்தபாடியில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்கி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அறிவுரை.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேலைக்கு செல்லுக்கு பெண்களுக்காக மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்மா இரு சக்கர வாகன மானியங்களை தற்போது தமிழக அரசு சார்பில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தபாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சுற்றுசூழத்துறை அமைச்சர் கே.சி.கருபணன்,கவுந்தபாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் தனியார் பணிகளுக்கு செல்லும் 71 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன மானிய தொகைகாண சான்றிதழ்களை வழங்கினார்.
உடன் கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இருசக்கர வாகன மானியங்களை வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் வாகனம் ஓட்டும் போது பெண்கள் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.