மதுரை 47 வது வார்டு பந்தடி 5 வது தெருவில், அம்மா பேரவை செயலாளர் ஆர்.கே.ஜி ஸ்ரீதர் மற்றும் வட்டச் செயலாளர் மன்னாதி ஏற்பாட்டில், அப்பகுதியை சேர்ந்த ஏழை,எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.
இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஜெயபால், இளைஞரணி எஸ்.டி.ஜெ ராஜா, வார்டு பொருளாளர் சபரீஸ், வட்ட பிரதிநிதி சீனிவாசன், ராதா, எப்.ஓ.பி செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலாம் டிவி செய்திகளுக்காக மதுரை கனகராஜ்