Breaking News
Home / செய்திகள் / இராமேஸ்வரத்தில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு மணிகண்டன் எம்.எல்.ஏ நிதி உதவி

இராமேஸ்வரத்தில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு மணிகண்டன் எம்.எல்.ஏ நிதி உதவி

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 13ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் இதில் ஹென்ட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடலில் மூழ்கியதையடுத்து ரெஜின் பாஸ்கர், மலர் வண்ணன் மற்றும் ஜேசு ஆகிய மீனவர்கள் கரை திரும்பவில்லை., இதில் ஜேசு என்ற மீனவர் மட்டும் மறுநாள் ஐஸ்பெட்டி மூலம் நீந்தி கோட்டைப்பட்டிணம் வந்த நிலையில் மற்ற 3 மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது.,

இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் உயிரிழந்த மீனவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்ததோடு ஒரு குடும்பத்திற்கு 50ஆயிரம் ரூபாய் வீதம் 2 மீனவ குடும்பத்திற்கு ஒரு லட்சமும், காயமடைந்த குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரமும் நிதியுதவியாக வழங்கினார்.

மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அவர்களிடமும் தகவல் தெரிவித்து உரிய நிவாரணத்தொகையினை பெற்றுத்தருவதாகவும், மீனவகுடும்பங்களில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கல்வி செலவை ஏற்றுகொள்வதாகவும் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

உடன் ராமேஸ்வரம் நகர் கழக செயலாளர் திரு.K.K.அர்ச்சுணன், மு.ஒன்றிய கழக செயலாளர் திரு.முத்தாண்டி, பாம்பன் கவுன்சிலர் திரு.அலெக்ஸ், திருமதி.விஜயலெட்சுமி, திரு.லயோலா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கலாம் டிவி செய்தியாளர் ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மருதம் ஆன்மிக பேரவை தலைவர் வழக்கறிஞர் சரவணபாண்டியன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம்

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு வெளியிட்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மருதம் ஆன்மிக பேரவை தலைவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *