Breaking News
Home / செய்திகள் / திருப்பூரில் வாடகைக்கு குடியிருப்போர்களை மிரட்டும் வீட்டு உரிமையாளர்கள்

திருப்பூரில் வாடகைக்கு குடியிருப்போர்களை மிரட்டும் வீட்டு உரிமையாளர்கள்

திருப்பூரில் வாடகைக்கு குடியிருப்போர்களை மிரட்டும் வீட்டு உரிமையாளர்கள்

வாடகையை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை!

வாடகைக்கு குடியிருப்பவர்களிடம், வாடகை கட்டவே வழியில்லாத சூழலில் இலவச  மின்சாரத்திற்கும் சேர்த்து குறைந்தபட்ச கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6 முதல் ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கின்றனர் வீட்டு உரிமையாளர்கள்.

மாதம் ஒன்றுக்கு தண்ணீருக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம்,வாசலை கூட்ட  குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.1500 வரை அடாவடி வசூல் செய்து வருகின்றனர்

வந்தவரை வாழவைக்கும் திருப்பூர் என்று கூறி உழைத்து சம்பாதிக்கும் அப்பாவிகளிடம் கொத்தாக பணத்தை பிடுங்கிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் வீட்டு உரிமையாளர்கள். 

மேலும் தற்போது ஊரடங்கை நீட்டிக்கும் சூழலில் இன்னும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் வாடகைக்கு குடியிருப்போர்கள்.

வாடகை வீட்டுக்காரன் எப்படி இருந்தால் நமக்கென்ன… மாதம் பிறந்தால்  வாடகை பணம்  வருகிறதா… என பணத்தை மட்டுமே  பார்க்கும் திருப்பூர் வீட்டு உரிமையாளர்கள் மனசாட்சி இல்லாதவர்களே… கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக வருமானம் இல்லாத வெளிமாவட்ட  தொழிலாளர்கள் சொந்த ஊருக்கும் செல்லமுடியாமலும் வாடகையும் கட்ட முடியாமலும் தவிக்கின்றனர் வாடகை கட்ட சொல்லி துன்புறுத்தி வருகின்றனர் வீட்டு உரிமையாளர்கள்..  

இதற்கு மேல் பல வீட்டு உரிமையாளர்கள் வீட்டை பூட்டி வைத்து விட்டு உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை வாடகையைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு செல் என மிகவும் கேவலமாக வாடகைதாரர்களை நடத்துகின்றனர்.

இவற்றையெல்லம்  அரசு கவனத்தில் கொண்டு மீண்டும் ஊரடங்கை நீட்டிக்கும் சூழலில் வீட்டு உரிமையாளர்களை எச்சரித்து உடனடியாக வாய்மொழியாக இல்லாமல் அரசாணை வெளியிட்டு வாடகைதாரர்களை பாதுகாக்க வேண்டும்.

திருப்பூரில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் கூடுதலாக கொள்ளையடித்த பணத்தை வாடகைக்கு குடியிருப்பவர்களிடமே மீண்டும் கொடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள படுகின்றனர்.

உடனடியாக மாவட்ட ஆட்சியாளர் விஜயகார்த்திகேயன் இப்பிரச்சனையை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு வரும் இதனால் பல குடும்பங்கள் பயனடையும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 

கலாம் டிவி செய்திகளுக்காக திருப்பூர் மயில் மணி

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart