Breaking News
Home / செய்திகள் / தேவதானப்பட்டியில் முதல் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று

தேவதானப்பட்டியில் முதல் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று

தேவதானப்பட்டியில் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று .

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் தேனி மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்

இன்று வியாழக்கிழமை தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த 9 மாத கர்ப்பிணிக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது .தேவதானப்பட்டியில் முதல் முறையாக கொரோனா நோய் தொற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

இதனால் தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பேரூராட்சி பணியாளர்கள் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளித்து தடுப்புகள் அமைத்து அந்த பகுதி மூடப்பட்டது .
.

இருப்பினும் தேவதானப்பட்டி தெற்குத்தெரு பகுதி என்பது அதிக அளவில் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்க கூடிய பகுதி என்பதால் அப்பகுதி உள்ள பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் .அந்த பகுதியில் உள்ள மற்ற நபர்களுக்கு ஓரிரு தினங்களில் பரிசோதனை செய்யப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர் .

கலாம் டிவி செய்திகளுக்காக பெரியகுளம் செய்தியாளர் தாமோதரன்

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart