Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியத்தில், கிராமம்- கிராமமாக, “இந்து முன்னணி” சார்பில், ‘நோய் எதிர்ப்பு” சக்திக்கான, “ஓமியோபதி” மாத்திரைகள் விநியோகம்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியத்தில், கிராமம்- கிராமமாக, “இந்து முன்னணி” சார்பில், ‘நோய் எதிர்ப்பு” சக்திக்கான, “ஓமியோபதி” மாத்திரைகள் விநியோகம்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியத்தில், கிராமம்- கிராமமாக, “இந்து முன்னணி” சார்பில், ‘நோய் எதிர்ப்பு” சக்திக்கான, “ஓமியோபதி” மாத்திரைகள் விநியோகம்!

திருநெல்வேலி, ஜூன்.25:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பத்தமடை, மணிமுத்தாறு குளம், மேலச்செவல், கோபால சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இந்து முன்னணியினர், கிராமம்-கிராமமாக சென்று, வீடு-வீடாக, நோய் எதிர்ப்பு சக்தி, ஓமியோபதி மாத்திரைகளை, கட்டணமில்லாமல், இன்று (ஜூன். 25), விநியோகம் செய்தனர்.” ஆர்சனிகம் ஆல்பம்” என்னும் பெயரிலான இவை,60 மாத்திரைகளை கொண்ட தொகுப்பாக, ஒவ்வொருவருக்கும், வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட, இந்து முன்னணியின், “செயற்குழு உறுப்பினர்” டி.செல்வக்குமார் தலைமையில், சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் இசக்கி, பத்தமடை நகர செயலாளர் இசக்கி முத்து, துணை தலைவர் வேலு, கோபால சமுத்திரம் நகர துணை செயலாளர் மாரியப்பன், நிர்வாகக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், இந்து அன்னையர் முன்னணி செயலாளர் சாவித்திரி, ஆட்சிக்குழு உறுப்பினர் வள்ளி ஆகியோர், இந்து முன்னணி தொண்டர்களுடன் இணைந்து, மொத்தம் 600 வீடுகளின், குடும்ப உறுப்பினர்களுக்கு, இவற்றை வழங்கினார்கள். “மத்திய-மாநில அரசுகள்” பரிந்துரை செய்துள்ளதின் அடிப்படையில், இந்த ஓமியோபதி மாத்திரைகள், தரப்படுவதாக, தம்முடைய தலைமை உரையில் குறிப்பிட்ட, செல்வக்குமார், “இந்த மாத்திரைகளை எப்போது, எவ்வாறு சாப்பிட வேண்டும்?” என்பது குறித்தும், விளக்கினார். அனைவரும் “முகக்கவசங்கள்” அணிந்து, “சமூக இடைவெளி”யினை பின்பற்றி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது, “வரவேற்கத் தக்க” ஒன்றாகும். திருநெல்வேலியில் இருந்து, “ஒளிப்பதிவாளர்” எஸ். மணிகண்டனுடன், “மாவட்டச் செய்தியாளர்” அசன்.

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart