Breaking News
Home / செய்திகள் / ராணிப்பேட்டையில் கொரோனா கட்டுப்பாடு குழு அமைப்பு

ராணிப்பேட்டையில் கொரோனா கட்டுப்பாடு குழு அமைப்பு

ராணிப்பேட்டையில் கொரோனோ கட்டுப்பாடு குழு அமைப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கொரோனா தொற்று அதிகம் உள்ள தர்மநீதி, அத்திப்பட்டு, மாமண்டூா், புதுப்பட்டு, பாணாவரம், குப்புகல்மேடு உள்ளிட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்ளவும், மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி ,தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நெமிலி வட்டாச்சியர் ரேவதி காவேரிப்பாக்கம் ஓன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லேனாதேவி ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் மேற்படி பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பிளிச்சிங் பவுடர் கிருமிநாசினி உள்ளிட்டவற்ரை கட்டுப்பாடு பகுதியில் நாள்தோறும் தெளித்து சுத்தப்படுத்திடவும் கண்டிப்பாக முக கவசம் அணியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவருவதை தடுக்கவும் உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின் போது பாணாவரம் காவல் நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் ஜெயராஜ் காவலர் விஸ்வநாதன் கிராம நிர்வாக அலுவலர் சதீஸ், ஊராட்சி செயலர்கள் பிச்சாண்டி, சரஸ்வதி கிராம உதவியாளர் வில்சன் ஆகியோர் உடனிருந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் கலாம் டிவி
செய்தியாளர் பாஸ்கரன்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart