Breaking News
Home / செய்திகள் / தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கொரோனா

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கொரோனா

ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் அண்மை காலமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில், தேனி மாவட்ட ஆவின் தலைவரும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ. ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஓ. ராஜாவின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில், அவரது 62 வயது மனைவி மற்றும் உறவினர்கள் இருவருக்கு தொற்று இருப்பது இன்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக தேனி செய்தியாளர் சதிஸன் உடன் ஒளிப்பதிவாளர் அஜ்மல்கான்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart