Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் ஏர்வாடி ஆகிய ஊர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் ஏர்வாடி ஆகிய ஊர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் ஏர்வாடி ஆகிய ஊர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

உடுமலைப்பேட்டை ஆணவ படுகொலை வழக்கில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்! இந்த வழக்கில், குற்றவாளிகள் தப்பிவிடாதபடி, வழக்கை கடைசிவரையிலும், உறுதியாக நடத்திட வேண்டும்! சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட, தமிழ்நாடு அரசு, தனிச்சட்டம் இயற்றிட வேண்டும்!

சாத்தான் குளம் சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை, நிரந்தரமாக பணிநீக்கம் செய்திடல் வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கிடல் வேண்டும்!- ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மற்றும் ஏர்வாடியில்,கடந்த (ஜூன். 29) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க, மாவட்ட செயலாளர் மா.பெ.சுகுமாரன் தலைமை வகித்தார். இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.பால்ராஜ், ஏஎல்ஒய்எப் ஒன்றியச் செயலாளர் பி. திருமணி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.முருகன், ஏஐஒய்எப் வி.பாரதி தாசன் மற்றும் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது போல ஏர்வாடியில், மாநில குழு உறுப்பினர் எம்.லெனின் முருகானந்தம், விவசாய சங்க மாநில துணைத் தலைவர் பி.பெரும் படையான், நகரச் செயலாளர் பாண்டி, ஏஐஎஸ்எப் பிரபு, ஜெயக்குமார், ஆலங்குளம் கிளைச் செயலாளர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart