Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருநெல்வேலி சந்திப்பு, ரெயில் நிலையம் முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில், “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. மாநகர் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சிறப்பு” அழைப்பாளராக, கலந்து கொண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தை, துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து, நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு காரணமான, மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறிக்கும் வகையில், இருசக்கர வாகனத்தை பாடையில் கட்டி, தூக்குவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்தனர்.

அப்போது, பாய்ந்து வந்த போலீசார், அதனை தடுத்து நிறுத்தினர் . இதனையடுத்து, இருசக்கர வாகனத்திற்கு, மாலை போட்டு, ஆரப்பாட்டத்தின் நடுவே நிறுத்தி, ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை முன்னாள் இணை அமைச்சர் ஆர். தனுஷ் கோடி ஆதித்தன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார், தென்காசி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.பழனி நாடார் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தினால், அந்தப்பகுதியில், “போக்குவரத்து” முற்றிலும் தடை பட்டது.

“கலாம் நியூஸ்” செய்திகளுக்காக, திருநெல்வேலியில் இருந்து, “ஒளிப்பதிவாளர்” எஸ். மணிகண்டனுடன், “மாவட்டச் செய்தியாளர்” அசன்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart