Breaking News
Home / செய்திகள் / பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.டிஎஸ்பி விசாரணை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாயில் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. 

கடந்த 3நாட்களாக பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த போது கெட்ட துர் நாற்றம் வீசியது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. நேற்று துர்நாற்றம் அதிகமாக வீசியதால் இப்பகுதி மக்கள் சாக்கடை கால்வாய் பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது. உடனடியாக பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த டிஎஸ்பி பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்.இன்ஸ்பெக்டர் சவ்வாதுஉசேன் மற்றும் போலீசார் இவர்களுடன் நகராட்சி துப்பரவு பணியாளர்கள் உதவியுடன் ஆண் சடலத்தை தூக்கி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் காக்கி கலர் சட்டை அணிந்து உள்ளார். வலது கையில் ஆங்கில எழுத்தில் பச்சை குத்தி உள்ளார். மேலும் லவ் பேட்ஸ் பறவை பச்சை குத்தி உள்ளார். இதுகுறித்து டிஎஸ்பி கூறுகையில்  விலாசம் தெரியாத ஆண் சடலம் கொலையா? இரவு நேரத்தில் குடிபோதையில் சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்து விட்டாரா என பல கோணங்களில் விசாரித்து வருகிறோம் என கூறினார்.

கலாம் டிவி செய்திகளுக்காக பண்ருட்டி தர்மராஜா

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart