Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் சோழவந்தானில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது

 
 இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனைக்கு இணங்க மாநிலத் தலைவர் அழகிரி,முன்னாள் எம்எல்ஏ செல்வபெருந்தகை ஆகியோர் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை கண்டித்தும் சாத்தான்குளம் கோவில்பட்டி ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகியோர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் சோழவந்தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டி மாநில எஸ்சி எஸ்டி பிரிவு துணைத் தலைவர் மூர்த்தி தலைமையில் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லப்பா சரவணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் விலை விலை உயர்வைக் கண்டித்தும் இந்திய ராணுவ வீரர்களின் லடாக் பகுதி படுகொலையை கண்டித்தும் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் பெனிக்ஸ் கொலைக்கு நீதி விசாரணை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் முன்னாள் மாவட்டத் தலைவர் கணேசன் நகரத் தலைவர் முருகானந்தம் தொகுதி தலைவர் மணிவண்ணன் வட்டார தலைவர் மாரியப்பன் மாவட்ட அமைப்பாளர் ஜெயமுருகன் மாவட்ட கமிட்டியின் தலைவர் இளவரசன் மாவட்ட துணைத்தலைவர் ராஜா மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர் இவர்களை சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் கைது செய்தார்.

 
 

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart