மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கொரோனாவைரஸ் ஊரடங்கு அமுலில் உள்ளதால்
தலித் விடுதலை இயக்கம் சார்பாக மேலவளைவு தியாகிகள் தினத்தையொட்டி
தமிழகத்தில் எஸ்.சி.எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டத்தை
வலுப்படுத்தக்கோரியும், மாவட்டந்தோறும் சிறப்பு தனிநீதிமன்றம்
அமைக்க கோரியும் முகநூல் ஆர்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்திற்கு
மாநிலபொதுச்செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். இதில்
விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பஞ்சுவீரன், தமிழ்பாண்டி,
பூர்வீகமக்கள்விடுதலை கட்சி நிர்வாகிகள் செல்லக்கண்ணு, அழகர்சாமி ஆகியோர்
கலந்துகொண்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாததைகள்
கையில் ஏந்திகோஷம் எழுப்பப்பட்டது.