Breaking News
Home / செய்திகள் / வேட்டவலம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 350 பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது

வேட்டவலம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 350 பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது

வேட்டவலம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 350 பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 350 பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது.

வேட்டவலத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வேட்டவலம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் கூடுதல்(பொறுப்பு)
வெங்கடேஷ்வர் தலைமையில் 350 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி மற்றும் அசில் இன கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேட்டவலம் கால்நடை மருத்துவமனை மேற்பார்வையாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வேட்டவலம் கூட்டுறவு வங்கி தலைவர் கே.செல்வமணி கலந்துகொண்டு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியில் பங்குபெற்ற 350 பயனாளிகளுக்கு தலா 25 அசில் இன கோழிகள்,பயிற்சி கையேடு மற்றும் தலா 150 ரூபாயை வழங்கினார்.

இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அப்துல்காதர்,முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தக்ஷிணாமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசாரம் (எ)திருமூர்த்தி, சோழன், மற்றும் மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart