Breaking News
Home / செய்திகள் / மறைந்த செய்தியாளருக்கு இராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் நிதியுதவி

மறைந்த செய்தியாளருக்கு இராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் நிதியுதவி

மறைந்த செய்தியாளருக்கு இராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் நிதியுதவி

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 13 வருடங்களாக பத்திரிகை துறையில் பணியாற்றி வந்தார் . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார் .

இந்நிலையில் கடந்த 21.06.2020 அன்று உயிரிழந்தார் . ஆரம்ப காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். பிறகு ராஜ் டி.வி , மதிமுகம் டிவியில் ஒளிப்பதிவாளராகவும் , மூன் டிவி செய்தியாளராகவும் பணியாற்றினார்.

மறைந்த செய்தியை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் சங்கம், பிற மாவட்டங்களை சேர்ந்த செய்தியாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள் , ஊடகவியலாளர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சங்கங்த்தினர் நிதியுதவி அளிக்க எல்லோரும் முன்பு வந்து நிதியளித்தனர். இதன் தொகை ரூ.27,000 நிதியை அவரது குடும்பத்தாருக்கு இன்று இராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் சார்பாக சங்கத்தலைவர் தனபாலன் தலைமையில் வழங்கப்பட்டது சங்க நிர்வாகிகள் குமார், மகேஸ்வரன் பாலச்சந்தர் ரத்தினகுமார் தம்பி பாலா ஆகியோர் கலந்துகொண்டனர்

கலாம் நியூஸ் டி.வி.செய்தியாளர் ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திரபிரியங்கா சண்முகம் ரேஷன் கடை ஊழியர்களுக்கான 32 மாதம் நிலுவை சம்பளத்தை வழங்க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா சண்முகம் அவர்கள் ரேஷன் கடை ஊழியர்களுக்கான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart