Breaking News
Home / செய்திகள் / தேனி திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்ரோடு சோதனை சாவடியில் புகையிலை பறிமுதல்

தேனி திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்ரோடு சோதனை சாவடியில் புகையிலை பறிமுதல்

தேனி திண்டுக்கல் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனை சாவடியில் தேனி க்கு விற்பனைக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட 5 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பூதிபுரம் வாழையத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பசாமி இவர் தனது விநாயக டிரான்ஸ்போர்ட் வாகனத்தில் கோவை டு தேனி க்கு பொருட்கள் ஏற்றிவரும் வேலை பார்த்துவந்துள்ளார் .நேற்று கோவையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்த விநாயக டிரான்ஸ்போர்ட் வாகனத்தை தேனி திண்டுக்கல் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனை சாவடியில் காவலர்கள் வாகன தணிக்கையில் இருந்த தேவதானப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜோதி சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை 5கிலோ அளவில் கொண்டு வந்துள்ளனர் .

உடனே அந்த வாகனத்தையும் புகையிலையும் தேவதானப்பட்டி காவல் நிலையம் கொண்டுவந்து பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .
இதை போன்று இந்த மாதத்தில் போலி இ பாஸ் மூலம் தேனி வந்த இரண்டு வாகனங்களை காட்ரோடு சோதனை சாவடியில் தேவதானப்பட்டி காவலர்கள் ஆய்வு செய்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

கலாம் நியூஸ் டிவி செய்திக்காக பெரியகுளம் தாமோதரன்.

About Kanagaraj

Check Also

பழனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்

பழனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மற்றும் பொது மக்களுக்கு மாதம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart