Breaking News
Home / செய்திகள் / நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஓய்வூதியத்தை மீட்டெடுக்க அகவிலைப்படி சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப பெற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயனளிப்பவை ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிலுவை கோரிக்கைகளில் ஒன்றான ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் பங்கேற்றமைக்கான அரசால் மேற் கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருவதோடு, கடந்த மாதங்களில் ஓய்வு பெற இருந்த ஊழியரை அதுவும் கொரோனா தொற்று ஒழிப்பு பணியில் இருந்த ஊழியரை மேற்படி போராட்டங்களில் பங்கேற்றவர் என்பதற்காக ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது தமிழக அரசு.

கொரானா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி பற்றாக்குறை என்ற போலியான நாடகத்தில் சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் அகவிலைப்படி நிறுத்தம், சிரண்விடுப்பு பறிப்பு, பொது சேம நலநிதி வட்டி விகிதம் குறைப்பு, பயணப்படி போன்ற சில்லறை செலவினங்களுக்கு கட்டுப்பாடு என அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது ,
இது போன்ற கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிச்சைமணி தலைமை தாங்கினார், கால்நடை பராமரிப்பு துறை ஜனார்த்தனன், பேரூராட்சி துரைமுருகன், அய்யம்மாள், சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வனராஜ், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ரத்தினவேல் , பேரூராட்சி ஊழியர் சங்கம் செந்தில்குமார், ஆகியோர் கருத்துரையை வழங்கினார்கள்.

இதில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *