Breaking News
Home / செய்திகள் / பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை விற்பதை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், GST க்குள் கொண்டு வரக்கோரியும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து செலவை அரசே ஏற்கக்கோரியும், வருமான வரி செலுத்தாத குடும்பம் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ. 7500 நிவாரணம் வழங்கக் கோரியும் தேசம் முழுதும் அனைத்துச்சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருங்கல் ராஜீவ் காந்தி ஜங்சனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராஜா(சிஐடியு), மோகன்தாஸ்   (எல்பிஎப்) தலைமை தாங்கினர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பொன்.சோபனராஜ் ஆர்பாட்டத்தை துவக்கிவைத்தார். ஏஐடியுசி ஜார்ஜ் முடித்து வைத்தார்.    

        கருங்கல் தபால் நிலையம் முன் நடந்த போராட்டத்திற்கு  கிறிஸ்டோபர் ஜெகன் தலைமை தாங்கினார். றசல்ராஜ் முன்னிலை வகித்தார். பொன். சோபனராஜ் முடித்து வைத்தார்.
மிடாலக்காடு ஐஓபி முன் பாலப்பள்ளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கில்டா ரமணிபாய் தலைமை தாங்கினார்.  அமல்ராஜ், முருகேசன், முன்னிலை வகித்தனர்.  சிபிஎம் ஒன்றிய செயலாளர் சாந்த குமார் வாழ்த்தி பேசினார். சோபனராஜ் முடித்து வைத்தார்.             

தெருவுக்கடையில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். சார்லஸ் பேசினார். முள்ளங்கனாவிளையில் கட்டுமான ஒன்றிய செயலாளர் றசலானந்தராஜ் தலைமை தாங்கினார். பால்ராஜ் பேசினார் வேங்கோட்டில்ஜாண் சைலஸ் தலைமை தாங்கினார். ஜவகர் பேசினார். இப்போராட்டங்களில் பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart