Breaking News
Home / செய்திகள் / புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அரசு சார்பில் வழங்கப்படும் 20கிலோ இலவச அரிசியில் 2கிலோ எடை குறைவாக வழங்கப்பட்டதற்கு பெண் சட்டமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அரசு சார்பில் வழங்கப்படும் 20கிலோ இலவச அரிசியில் 2கிலோ எடை குறைவாக வழங்கப்பட்டதற்கு பெண் சட்டமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அரசு சார்பில் வழங்கப்படும் 20கிலோ இலவச அரிசியில் 2கிலோ எடை குறைவாக வழங்கப்பட்டதற்கு பெண் சட்டமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மஞ்சள் அட்டை குடும்பதாரர்களுக்கு 20கிலோ இலவச வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டு பல்வேறு தொகுதிகளில் அரசு பள்ளி ஆசியர்கள் மூலம் பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் வழங்கப்படும் இலவச அரிசி எடை குறைவாக வழங்கப்படுவதாக அத்தொகுதியின் பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்காவிற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வரிச்சிக்குடி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வழங்கிய 20கிலோ அரிசியை எடை போட்டு பார்த்த போது அதில் 17.5கிலோ எடை இருப்பது தெரியவந்தது மேலும் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு முறையும் எடை போடாமல் 20கிலோ அளவு கொண்ட பொருள் மூலம் அரிசி வழங்கியதால் எடை குறைந்ததாக ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

பின்னர் இலவச அரிசி வாங்கிச்சென்ற அனைவரையும் மீண்டும் அழைத்து எடை குறைவாக இருந்தவர்களுக்கு 20கிலோ இலவச அரிசியை எடை சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டது.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக காரைக்கால் செய்தியாளர் பாரூக்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart