Breaking News
Home / செய்திகள் / ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் காவல் நிலைய காவலர்கள் 6 பேருக்கு கொரோனோ

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் காவல் நிலைய காவலர்கள் 6 பேருக்கு கொரோனோ

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் காவல் நிலையத்தில் 6- பேருக்கு கொரோனோ தொற்று உறுதி

பாணாவரம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர் உட்பட மூன்று பேருக்கும் நெமிலி காவல் நிலையத்தில் மூன்று காவலர் என 6 பேருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனோ தொற்று உறுதியாகி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டனா்.

இந்நிலையில் இன்று பாணாவரம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் தலைமை காவலர் காவல் நிலைய தூய்மை பணியாளர்கள் என மேலும் மூன்று பேருக்கும் தொற்று உறுவாகி சோளி்ங்கர் அரசு மருத்துவ மனையில் கொரோனோ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பாணாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் உட்பட 29 பேர் பணியில் இருந்தாலும், 11- பேர் மட்டுமே காவல் நிலைய பணியில் இருந்து வந்துள்ளனா் . இந்நிலையில் இதில் 6 பேர் கொரோனோ தொற்றில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவும் நிலையில், மீதமுள்ள காவலர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் படி, அரக்கோணம் உட்கோட்ட துனை கண்கானிப்பாளர் அறிவுறுத்துதலின் பேரில் காவல் நிலைய வளாகத்தில் ஷாமியானா பந்தல் அமைத்து தொடர்ந்து பொதுமக்களின் புகார்களை பெற்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், காவலர்கள் பொதுமக்களின் சேவகர்கள் என்பதை நிருபித்துள்ளனா் என பொதுமக்கள் பாராட்டுகின்றனா்.

.

ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் தொகுதி கலாம் டிவி செய்தியாளர்
பாஸ்கரன்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart