Breaking News
Home / செய்திகள் / பழனி ஆயக்குடி அருகே உள்ள ஆமைக்கரடு என்னும் கரட்டுப் பகுதியில் பழந்தமிழர்களின் கல்திட்டை

பழனி ஆயக்குடி அருகே உள்ள ஆமைக்கரடு என்னும் கரட்டுப் பகுதியில் பழந்தமிழர்களின் கல்திட்டை

பழனி ஆயக்குடி அருகே உள்ள ஆமைக்கரடு என்னும் கரட்டுப் பகுதியில் பழங்கால தமிழர்களின் மரபு வழியான கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆயி என்னும் வள்ளல் ஆண்டு வந்த பகுதியாக கருதப்பட்ட ஆயக்குடி பகுதியில் பழந்தமிழர்களின் கல்திட்டை இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து தொல்லியல் துறை சார்பாக ஆமைக்கரட்டுப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரியின் பண்பாட்டுத் துறை பேராசிரியர் அசோகன் ஆகியோர் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வில் பழந்தமிழர்களின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பழங்கால நினைவுச் சின்னங்களாக இந்த கல்திட்டைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.என்று ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் விதமாக மறுபிறப்பு மட்டும் ஏழு பிறப்பு வாழ்க்கை வேதங்களைக் குறிக்கும் கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த கல்திட்டைகளை பார்ப்பதற்காக வரலாற்று மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து விட்டுச் செல்கின்றனர்..

கலாம் டிவி செய்திகளுக்காக பழநி சுரேஷ்

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart