Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அப்பள தொழிலாளர்களுக்கு ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கிய அப்பளம் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன்

மதுரையில் அப்பள தொழிலாளர்களுக்கு ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கிய அப்பளம் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன்

மதுரையில் அப்பள தொழிலாளர்களுக்கு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கினார்

மதுரை மாவட்டத்தில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாதாரண நடுத்தர மக்கள் வேலைக்குச் செல்லவும், வெளியே கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்வதற்கு கூட அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் மதுரை வாழ் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கத்தின் சார்பாக அதன் மாநிலத்தலைவர் திருமுருகன் அவர்கள் அப்பள தொழிலாளரின் குடும்பத்தினர் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மாத்திரை யான ஆர்சனிக் ஆல்பம் 30 இலவசமாக வழங்கினார்.

இதுகுறித்து அப்பளம் வடகம் சங்க மாநில தலைவர் திரு முருகன் கூறுகையில்:- மதுரையில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது மதுரை மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்களது சங்கத்தின் சார்பாக அப்பள தொழிலாளர்களுக்கு குடும்பத்தினர் அனைவருக்கும் இலவசமாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக ஹோமியோபதி மாத்திரையான ஆர்சானிக் ஆல்பம் 30 மாத்திரைகளை இலவசமாக வழங்கி வருகிறோம்.

மேலும் இந்த ஆர்சானிக் ஆல்பம் 30 மாத்திரைகளை கொரோனா அச்சுறுத்தலையும் மீறி செய்திகளை சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வழங்க உள்ளோம்.

மேலும் அவர் கூறுகையில்:- இ.எஸ்.ஐ வசதி உள்ள ஒரு நிறுவனத்தில் உள்ள பணியாளர் ஏதேனும் விபத்தில் மரணம் நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ இல் இருந்து பென்ஷன் வழங்கப்படுகிறது. இதேபோல் கொரானா வைரஸால் மரணம் ஏற்பட்டால் விபத்து மரணமாக கருதி அவர்களுக்கு பென்ஷன் வழங்குமாறு மத்திய மாநில அரசுகளை எங்கள் அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.
என்று கூறினார்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக
மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart