Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி மாவட்டத்தில், “எஸ்டிபிஐ” கட்சியின், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில், “எஸ்டிபிஐ” கட்சியின், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

“கொரோனா ஊரடங்கு” காலம் முடியும் வரை, நாட்டு மக்கள் அனைவருக்கும், “ரேசன்” பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும்!

திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் எட்டு இடங்களில், “எஸ்டிபிஐ” கட்சியின், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி,ஜூலை.3:- “தொழிலாளர் சட்டங்களை சுருக்குவது, நீக்குவது, தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது ஆகியவற்றை, உடனடியாக கைவிட வேண்டும்! “கொரோனா வைரஸ்” தொற்று பெயரால், “பொதுத்துறை” நிறுவனங்களை, “தனியார்” வசம் ஒப்படைக்கும் திட்டத்தை, “ரத்து” செய்ய வேண்டும்! புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து, பேருந்து கட்டணத்தையோ, ரெயில் கட்டணத்தையோ பெறாமல், அவர்களை, அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு, வீண் காலதாமதம் செய்யாமல், விரைந்து அனுப்பி வைக்கவேண்டும்!

“கொரோனா வைரஸ்” ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துக் கொடுப்பதுடன், அவர்களுக்கென “தனியாக சிறப்பு காப்பீட்டு” திட்டத்தையும், செயல்படுத்த வேண்டும்! இன்னும் ஆறுமாதங்களுக்கு, நாட்டு மக்கள் அனைவருக்கும், “ரேசன்” பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும்!” உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஜூலை. 3) திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் எட்டு இடங்களில், “எஸ்டிபிஐ” கட்சியின், தொழிற்சங்கப் பிரிவான, “எஸ்டிடியூ” சார்பில், சமூக இடைவெளியினை பின்பற்றி “ஆர்ப்பாட்டங்கள்” நடைபெற்றன. மேலப்பாளையத்தில், மாவட்ட தலைவர் “களந்தை” மீராசா, பத்தமடையில் நகர தலைவர் அசன் காதர், பர்கிட் மா நகரில் சுகைப் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி, “குரல்” எழுப்பினர்.”கலாம் நியூஸ்” செய்திகளுக்காக, திருநெல்வேலியில் இருந்து, “ஒளிப்பதிவாளர்” எஸ். மணிகண்டனுடன், “மாவட்டச் செய்தியாளர்” அசன்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart