Breaking News
Home / செய்திகள் / 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ், முன்னாள் எம்.எல்.ஏ.நாஞ்சில் முருகேசன் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ், முன்னாள் எம்.எல்.ஏ.நாஞ்சில் முருகேசன் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ், தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ.நாஞ்சில் முருகேசன், திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார்!

நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தேடப்பட்டு வந்த, நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை, திருநெல்வேலி மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில்,திசையன்விளையில், காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தபோது, வள்ளியூர் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பிரபு பாஸ்கர், கன்னியாகுமரி தனிப்படை உதவி ஆய்வாளர் சாம்சங் ஜெபதாஸ் ஆகியோர், அதிரடியாக “கைது” செய்து, அழைத்து சென்றனர்.

இந்த வழக்கில், சிறுமியின் தாயார் உட்பட, 4 பேர், ஏற்கனவே “கைது” செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“கலாம் நியூஸ்” செய்தி களுக்காக, திருநெல்வேலியில் இருந்து, “மாவட்டச் செய்தியாளர்” அசன்.

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart