Breaking News
Home / செய்திகள் / முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர் மணிமண்டபத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர் மணிமண்டபத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 5ம் வருட நினைவு நாளையொட்டி அவர் மணிமண்டபத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்., மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது., பேய்க்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் குடும்பத்தினர் உட்பட 20 நபர்கள் மட்டும் சிறப்பு துவா செய்தனர், அதன் பின் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்., கடந்த காலங்களில் கலாமின் நினைவு நாளன்று பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும் வந்த நிலையில் தற்போது கொரோனோ வைரஸ் காரணமாக பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை இது குறித்து பேசிய கலாமின் அண்ணன் பேரன் சலீம் கொரோனா வைரஸ் காரணமாக யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நினைப்பவர்கள் அவரவர் வீடுகளில் முன் நின்று மரியாதை செலுத்தலாம் என தெரிவித்தார்., மேலும் மத்திய மாநில அரசு அறிவித்தது போன்று கலாம் மணிமண்டபம் அருகே அறிவுசார் மையமும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart