Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறையில் காங்கிரசார் உண்ணாவிரதம்.

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறையில் காங்கிரசார் உண்ணாவிரதம்.

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறையில் காங்கிரசார் உண்ணாவிரதம்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தை மையமாக கொண்டு இனயம் மற்றும் தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் படகுகளில் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் 2 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

துறைமுக நுழைவு வாயிலில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளால் விபத்துகள் நடந்து உயிர் இழப்புகள் ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்யவேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா
₹ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் முள்ளூர்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.

இப்போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரடி கென்னடி, மாநில பொதுச்செயலாளர் எடிசன், பைங்குளம் ஊராட்சி உறுப்பினர் கிளீட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் சபீன் போராட்டத்தை துவக்கி வைத்தார்.

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜிலா, காட்வின், மீனவர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ஸ்டாலின், சூசை பிரடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்ட குழுவினரிடம் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், புதுக்கடை இன்ஸ்பெக்டர் உமா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart