Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பா.ம.க வில் இணைந்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பா.ம.க வில் இணைந்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் விலகி பா.ம.க வில் இணைந்தனர். ஒழுகைமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தங்களை பா.ம.க. வில் இணைத்துக்கொண்டனர். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் முத்துகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

அப்போது கட்சியில் இணைந்தவர்களை பா.ம.க வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் நகர செயலாளர் ராம்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் பாலமுருகன், தொழிற் சங்க தலைவர் ராஜதுரை, முன்னாள் மாவட்ட துணை தலைவர் பாலா மற்றும் பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திக்காக தரங்கம்பாடி பாலமுருகன்

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart