Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் கடந்த சில நாட்களாக காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்தன. குறிப்பாக கீழையூர், சேத்தூர், ஆக்கூர் , பெரம்பூர் உட்பட பல இடங்களில் நெற்கதிர்களுடன் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையினால் சாய்ந்துள்ளதால் நெற்கதிர்களை அறுவடை செய்வது பாதிக்கும் என்றும் சாய்ந்த நெற்கதிர்கள் வயலில் முளைத்துவிடும் அல்லது அழுகிவிடும் எனவும் இதனால் இழப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சாய்ந்த நெல்லை இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு அதிக வாடகை கேட்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது குறுவை சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தநிலையில் கன மழையால் நெற்கதிர்கள் சாய்ந்து நீரில் கிடப்பதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இதற்கு அரசு நிவாரணம் வழங்குவதோடு, இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலாம் நியூஸ் செய்திக்காக தரங்கம்பாடி பாலமுருகன்

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart