Breaking News
Home / செய்திகள் / திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் உலக கழுத்துக் குட்டை தினம் கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் உலக கழுத்துக் குட்டை தினம் கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில்
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில்
உலக கழுத்துக் குட்டை தினம் கொண்டாடப்பட்டது

ஆண்டுதோறும் உலக சாரண சாரணியர் இயக்கத்தால் ஆகஸ்ட் 1 – ஆம்தேதி உலகம் தழுவிய அளவில் சாரண
சாரணியர்களால் சாரணர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
இந்த நாளில் தாய்நாட்டிற்கும், தன் கடமையைச் செய்யவும், பிறருக்கு உதவி செய்யவும்
சாரணர் இயக்கத்தின் சட்டத்தை பின்பற்றி தன்னம்பிக்கை, பற்று ,சகோதரத்துவம் மரியாதை, இயற்கையை நேசித்தல்
சுயகட்டுப்பாடு பொதுசொத்தை பாதுகாப்பதில்துணை நிற்றல், திறன்களை மேம்படுத்திக் கொள்ளுதல் வாழ்வில் தூய்மையாக இருத்தல் , போரில்லா அழகான உலகத்தை வடிவமைப்பதில் சாரணர் இயக்கம் அடித்தளமாக உள்ளது
மேற்கண்ட லட்சியங்களை நினைவு கூறும் வகையில் சாரணர் இயக்கத்தினர் சாரணர் தினத்தில் கழுத்துக் குட்டை அணிந்து மாவட்டம் முழுவதும்
திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில்
மாவட்ட செயலாளர் ஜி.பியூலாகரோலின் தலைமையில்
கலைவாணி மாவட்ட பயிற்சிஆணையர், அருண்குமார், மாவட்ட அமைப்பு ஆணையர்
மற்றும் சாரண சாரணியர்கள்பல வண்ண கழுத்துகுட்டைகளை Scarfs காட்சிப்படுத்தியும்
இயக்க உறுதிமொழியை ஏற்றும், கோவிட்- 19 சுகாதார உறுதி மொழியுடன் கொண்டாடினர்
போளூர் கல்வி மாவட்டத்தில்
பாரத சாரண சாரணிய இயக்கத்தினர்
மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில்
அமிர்தா ,மாவட்ட அமைப்பு ஆணையர் ,ரமேஷ் மாவட்ட பயிற்சி ஆணையர்
ஜமுனாராணி, மாவட்ட பயிற்சி ஆணையர் உள்ளிட்டோர்,
கழுத்துக் குட்டையை அணிந்து சாரண சாரணிய உறுதி மொழியை ஏற்று.
நினைவு கூர்ந்து வாழ்வில்
சாரண சாரணிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி செயல்பட உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் செங்கம் கல்வி மாவட்டத்தில்
மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமையில்
மாவட்ட அமைப்பு ஆணையர் ஸ்டெல்லா
மாவட்ட அமைப்பு ஆணையர் அன்பழகன், மாவட்ட பயிற்சி ஆணையர் பாலகுமார் உள்ளிட்டோர்
சாரணர் இயக்க உறுதிமொழியை கழுத்துக்குட்டை அணிந்து உறுதி மொழி ஏற்று உலக சாரணர் தினத்தை கழுத்துக் குட்டை அணிந்து கொண்டாடினர்.
இயக்கத்தின் நோக்கம், விதிமுறைகள் நினைவு கூறும் வகையில்மாவட்டம் முழுவதும்
சாரணர் இயக்கத்தினரால் வீட்டில் இருந்தபடியே கொண்டாடப்பட்டது.

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart