Breaking News
Home / செய்திகள் / பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு முகாம்

பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு முகாம்

பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு முகாம் நடந்தது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பாவதிசிவசந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இளங்கோ, கவுன்சிலர் கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் தொண்டை வலி, கரகரப்பு, இருமல், சளி, காய்ச்சல், சுவைத் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகளை பொதுமக்களிடம் கண்டயறிப்பட்டது. இதில் அண்ணாகிராமம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாஸ்கரன், மருத்துவர் ராமநாதன், சுகாதார ஆய்வாளர் சத்தியநாதன், கிராம சுகாதார செவிலியர் தெய்வரம்பை, வார்டு உறுப்பினர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலாம் டிவி செய்திகளுக்காக கடலூர் தர்மராஜ்

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart