Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்க மாநிலத்தலைவர் திருமுருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்க மாநிலத்தலைவர் திருமுருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்க மாநிலத்தலைவர் திருமுருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழக அரசு 31/8/2020 வரை ஊரடங்கு நீட்டித்து அறிவித்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கின்றது ஏற்கனவே சிறு குறுந்தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த நிலையில் மீண்டும் இந்த ஊரடங்கு நீட்டிப்பு சிறு தொழில்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக விடும் குறிப்பாக அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்புகள் பாதிப்பு அடையும்.

காரணம் என்னவென்றால் மத்திய அரசு அறிவித்த சலுகைகள் குறிப்பாக ஜிஎஸ்டி கட்டுவதற்கான கால அவகாசம் வங்கிகளுக்கான மாதாந்திர தவணையில் கட்டுவதற்கான கால அவகாசம் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிடும். தொழில்துறைகள் கட்டவேண்டிய வரிகள் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகைகள், தவணைத் தொகைகள் அனைத்தையும் செலுத்தவேண்டி இருக்கும் பொழுது ஊரடங்கு நீடித்துக் கொண்டே போனால் நிச்சயமாக பல்வேறு தொழில்களும் மூடப்படும் அபாயம் ஏற்படும் குறிப்பாக அப்பள தொழில் அதல பாதாளத்துக்கு சென்றுவிடும் காரணம் சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது

இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தை முடக்குவது என்பது சரியான தீர்வல்ல பொதுப் போக்குவரத்தை நிறுத்தி அதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. கார் வேன் வைத்திருப்பவர்கள் எல்லாம் எப்பொழுதும் போல அவர்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த வசதி வாய்ப்புகள் இல்லாத வர்கள் மட்டும் பாதிக்கப்படுவது நியாயம்தானா? யோசித்துப் பார்க்கவேண்டும் குறிப்பாக தினசரி கூலி வேலை செய்பவர்கள் பக்கத்து ஊருக்கு எப்படி வேலை செய்ய வருவார்கள் அவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலைமையில் இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் அன்றாடம் விற்பனையாளர்கள் தான் இந்த பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்துகின்றனர் இ பாஸ் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் காரணம் எங்கள் அப்பளம் விற்பனையாளர்கள் தினமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஏரியாகும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டியது இருப்பதால் இது சாத்தியக்கூறுகள் அல்ல வியாபாரிகள் சொன்ன நேரத்தில் வசூலுக்கு சென்றால் மட்டுமே பணம் வசூல் வரும் தற்போது இ பாஸ் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்தப் பணி மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும்பணி சுவையாக இருக்கிறதே தவிர அதனால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. காரணம் என்னவெனில் பல்வேறு விதமான கிராம சாலைகளில் எந்த விதமான கண்காணிப்பும் இல்லை செக் போஸ்ட்களில் ஆக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் அந்த வலி தெரிந்தவர்கள் அதன் வழியாகச் சென்று விடுகிறார்கள் பாதிக்கப்படுவது சாதாரண மனிதன்தான் எனவே இந்த ஏர்பாஸ் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart