Breaking News
Home / செய்திகள் / சென்னை புழல் அருகே வீட்டு வாடகை பிரச்சனையில் ஸ்ரீநிவாஸன் என்பவர் மண்எண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.

சென்னை புழல் அருகே வீட்டு வாடகை பிரச்சனையில் ஸ்ரீநிவாஸன் என்பவர் மண்எண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.

சென்னை புழல் அருகே வீட்டு வாடகை பிரச்சனையில் காவலர்கள் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டதால்
மனமுடைந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் மண்எண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.

சென்னை புழல் அடுத்து விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெரு சேர்ந்தவ ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஆறு மாத காலமாக வாடகைக்கு சீனிவாசன் வயது 40 வசித்து வந்தார்.

இவர் பெயிண்டர் ஆக பணியாற்றி வருகிறார் இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவதாக அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளதாக வீட்டு உரிமையாளர் ராஜேந்திரனுக்கு புகார் எழுந்தது இந்த புகாரின் பேரில் சீனிவாசனை கடந்த ஜனவரி மாதம் வீட்டை காலி செய்யுமாறு கூறியும் விட்டு காலி செய்ய மறுத்ததால் ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் கடந்த 29ஆம் தேதி புகார் கொடுத்தார்

இந்நிலையில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெண் சாம் நேற்று மதியம் சம்பவ இடத்தில் வந்து சீனிவாசனிடம் விசாரித்து நாளை காவல்நிலையம் வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 11 30 மணியளவில் போதையில் மண்ணெண்ணை எடுத்து தீ வைத்துக்கொண்டார்.

இவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart