Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அப்புராசபுரம்புத்தூர் டாஸ்மாக்கில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அப்புராசபுரம்புத்தூர் டாஸ்மாக்கில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

அப்புராசபுரம்புத்தூர் டாஸ்மாக்கில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு .

மயிலாடுதுறை மாவட்டம்
திருக்கடையூர் அருகே அப்புராசபுரம்புத்தூர் டாஸ்மாக்கில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு. போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அப்புராசபுரம்புத்தூரில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை ஊருக்கு ஒதுக்குபுறமாக தனியாக உள்ளது. இந்த கடை இரவு 8 மணிக்கு பூட்டி செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வந்து கடையை திறந்து பார்த்த போது கடையின் பக்கவாட்டு சுவரை துளைத்து ஓட்டை போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு பார்த்ததில் பீர்பாட்டில், பிராந்தி பாட்டில் உள்ளிட்ட மதுபாட்டில் பாக்ஸ்கள் திருடு போயிருந்தும் மதுபாட்டில்கள் கடையின் அருகில் சிதறி கிடந்தன.

இதனை அறிந்த கடையின் சூப்பர்வைசர் அசோக்குமார், பொறையார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் சீர்காழி டி.எஸ்பி யுவப்பிரியா, பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

திருடு போன மதுபாட்டில்கள் சுமார் ரூ.70 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலாம் நியூஸ் செய்திக்காக தரங்கம்பாடி பாலமுருகன்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *