Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை “கண்டித்து” ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை “கண்டித்து” ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை, “கைது” செய்ய வேண்டும்! மேலப்பாளையத்தில் நடைபெற்ற, “கண்டன” ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்!

“காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்” சார்பில், காவல்துறையினரைக் கண்டித்து, திருநெல்வேலி மாநகராட்சிக்கு, மேலப்பாளையத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள “சந்தை ரவுண்டானா” அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின், மாவட்டச்செயலாளர் “வழக்கறிஞர்” டி. அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வள்ளியூரில் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் செம்மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், மாவட்டச் செய்தி தொடர்பாளர் முத்துவளவன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின், மாவட்டச் செய்தி தொடர்பாளர் ஜமால், மாணவர் அணி அமைப்பாளர் நயினார், இளைஞர் அணி அமைப்பாளர் காஜா,மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அகமது உட்பட, கட்சியின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணியைத் தாக்கிய, காவல்துறையினரைக் “கைது” செய்ய வேண்டும். தென்காசி ஆழ்வார் குறிச்சியில், வனக்காவலர்களால் கொல்லப்பட்ட அணைக்கரை முத்து மரணம் குறித்து, நீதி விசாரணை நடத்திட வேண்டும். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய, அரசு மருத்துவர் வினிலா, நீதிமன்ற நடுவர் சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் கோபால், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குண்டர்கள் ஆகியோரை, “தேசிய பாதுகாப்பு” சட்டத்தின் கீழ், “கைது” செய்ய வேண்டும்.

வேலூர் காட்பாடியில் பெண்களைத் தாக்கி, தரக்குறைவாக நடந்து கொண்ட, காவல் ஆய்வாளர் புகழ், பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்!”- ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் போட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தினால், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்தில், தொய்வு ஏற்பட்டது.

“கலாம் நியூஸ்” செய்திகளுக்காக, திருநெல்வேலியில் இருந்து, “ஒளிப்பதிவாளர்” எஸ். மணிகண்டனுடன், “மாவட்டச் செய்தியாளர்” அசன்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *