Breaking News
Home / செய்திகள் / திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓட்டுர் முருகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலையில் அமர்ந்து சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓட்டுர் முருகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலையில் அமர்ந்து சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓட்டுர் முருகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலையில் அமர்ந்து சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகாயம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த முருகன் என்பவர் செங்கம் அரசு பணிமனையில் ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணியை முடித்துவிட்டு சென்னசமுத்திரம் வழியாக தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

விபத்தா அல்லது கொலையா? கொலையாளி யார்? எனவும் அக்குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கேட்டும் அரசு பணி வழங்கக்கோரியும் சடலத்தை சாலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இத்தகவலை அறிந்து வந்த காவல் ஆய்வாளர்கள் சாலமோன் ராஜா மற்றும் மலர் முருகனின் தம்பி ரமேஷ் மற்றும் அவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்டகாவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் தொடர்ந்தது.

இதற்கிடையில் ஏடிஎஸ்பி அசோக் குமார் பேர்ச்சு வார்த்தை நடத்தினார்.

பிறகு அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியதை அடுத்து முருகனின் உறவினர்கள் உடலை எடுத்துக் கொண்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *