Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் நல்லுறவு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கருங்கல் இராஜையா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கருங்கல் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர் ஹரிகுமாரன் முன்னிலை வகித்தார்.

வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், கருங்கல் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் டாக்டர் அஜித்குமார், துரைராஜ், கருங்கல் தொழில் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தாமஸ், ஜாகீர் உசேன் மற்றும் ஐயப்பன், குமாரவேல் மணி, புஷ்பராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் வர்த்தகர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஆய்வாளர் தங்கராஜ் பேசினார். போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அப்புறப்படுத்துவது. போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தவிர்ப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

About Kanagaraj

Check Also

மதுரையில் பிரமலைக்கள்ளர் சமூக சேவையில், பிரசிடென்சி சர்வீஸ் கிளப் சார்பில், செயற்குழு கூட்டம்

மதுரையில் பிரமலைக்கள்ளர் சமூக சேவையில், பிரசிடென்சி சர்வீஸ் கிளப் சார்பில், செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சீர்மரபினர் நலவாரிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *